எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண்பட்ட அரசியல்வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இவர், ஏழை எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சிமிகு எழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதை. அடக்கத்தின் வடிவம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நாட்டு மக்களுக்கு நல்கியவர்; முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் 
மேலும்

 

தந்தை பெரியார்
அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவரது அறிவின் திறம் தான். அவரது ஆட்சிக் காலத்தில் எந்தத் தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினுடைய அன்பை இதுவரை 
மேலும்


பாரதிதாசன்
எண்ணாத்துறை நாடி எண்ணிப் பிறர் நலம்
ஏற்பச் செய்தான் அண்ணாதுரை.
தலைசிறந்த பேச்சு வல்லோன் தமிழ்வீரன்
தமர் என்றும் தான் என்றும் நினைப்பகற்றித்
தமிழ்நாட்டின் நலத்திற்கே உயிர் உடல்கள்
அமைக என இரவு பகல் உழைக்கும் மோலோன்.
மேலும்


மேலும்

மேலும்

Copyright © 2009 Information and Public Relations Department, Government of TamilNadu. All rights reserved